விபிம் வெளியீட்டில் கவிஞர்.குறிஞ்சிவாணன் அவர்கள் 1967 முதல் 2009 வரை அச்சு ஊடகங்களில் எழுதி வெளியிட்ட   கவிதைகளின் தொகுப்பாய் இந்த ""துயரம் சுமக்கும் தோழர்களாய்...'' நூல் வெளிவந்திருக்கின்றது. 
            கவிஞர் குறிஞ்சிவாணன் பற்றி ""கவிஞன்'' வாசகர்களுக்குக் கூற வேண்டிய அவசியம் இல்லை காரணம் கவிஞன் சிற்றிதழின் 5வது இதழின் ""இம்மாதப் பிரபலம்'' பகுதியை அலங்கரித்தவர் இவர்.
    இனி துயரம் சுமக்கும் தோழர்களாய்... நூலின் பக்கங்களைப் புரட்டுவோம்..... கறுத்தப் பின்னணியில் அமைக்கப்பட்ட அட்டைப்படமே நூலின் தலைப்பைக்கூறுவது நூலுக்கு நிச்சயமாகவே வலுச்சேர்த்து நிற்கின்றது. 
    நூலைப் படிக்கும் முன்பே எழும் கேள்வி ''யார் அந்த துயரம் சுமக்கும் தோழர்கள்?"" என்பதுதான். நூலைப் படித்து முடித்ததும் நிச்சயமாக அதற்கான விடையை உங்களால் புரிந்துகொள்ள முடியும். 
        மொத்தம் 88 பக்கங்களில் 51       கவிதைகள் காணப்படும் இந்நூலில் அனேகமான      கவிதைகள் தோட்டத் தொழிலாளர்களை மையப்படுத்தியே அமைந்திருக்கின்றன.
தோட்டத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த வாழ்வியல் பிரச்சினைகளைக் கூறும் ஒரு சித்தரிப்பாகக் கூட இதனைக் கருதலாம். 
                    அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய பிரச்சினைகளைக்கூட நகைச்சுவைத் பாணியில் கவிஞர் கையாண்டிருப்பது கவிஞரின் தனித்துவத்திற்கு எடுத்துக்காட்டு.
        உதாரணமாக : 
ஆறுமுகம் ஆசார                            சீலர்
அடுத்தவர்க்கு அறிவூட்டும்         தோழர்
ஊரவரின் நகைகளினை
உடன் வாங்கி இருமடங்காய்
தேறவட்டி வாங்குமறி                    வாளர்
-------------------------
தாய்ச் சொல்லைத் தட்டாத-    பிள்ளை
தப்பிலியாய் வளர்த்திடவு-            மில்லை
கல்லூரி சென்று கற்று
கன்னியரின் நட்புக் கிட்ட
தாய்சொல்லோ அவனுக்கின்று             
                                                        -தொல்லை
-------------------------
கவிஞரின் அனைத்துக் கவிதைகளுமே ஒரு சந்தத்தில் அமைந்திருப்பது கவிஞரைஇஅவரது கவிதைகளை    வாசகரின் நெஞ்சில் நிறுத்தும் என்பதில் ஐயமில்லை.
    தமிழ்க்கவிதை மரபுக்கு இப்படியூம் ஒரு  புதிய இலக்கணம் சேர்க்குமாறு இன்னுமொரு கவிதையில் அறைகூவல் விடுக்கிறார் கவிஞர். கவிதை நூலில் பக்கம் 38 இல் ஓசி எனும் கவிதையைப் படித்தபின் முடிந்தால் முயலுங்கள்! 
        கவிஞரின் பாடுபொருளில் ஏலவே கவிதைகள் இருந்தாலும் கவிஞர் சொல்லும் விதமும்இ கையாண்டிருக்கின்ற
            
உவமைகளும் முற்றிலும் மாறுபட் டவையே.  
பாடவந்த பொருளில் நாட்டம் மிகுதியால் சந்தத்தில் கோட்டைவிடும் கவிஞர்களுள் வெற்றி பெற்றிருக்கின்றார் கவிஞர் குறிஞ்சிவாணன்.
துயரம் சுமக்கும் தோழர்களாய் தொகுதியிலிருந்து நீங்கள் சிலாகிக்கச் சிலவரிகள்....
விழி சொல்லும் புதுமை 
மௌ;ள நகைத்திடுவாள்! - என்னெஞ்சில்
மின்னலா ய+டிடுவாள்!
தொல்லை யகற்றிடுவாள்! - அவளிதழ்
தேனொத்த புன்னகையாள்!
..........
..........
மெல்லிடை மாது அன்னாள்-எனக்கென
இச்சகம் வந்து தித்தாள்!
சொல்லில் விளங்காக் கதை - அவள்விழி
சொல்லும் விதம் புதுமை!

                                மொத்தத்தில் கவிஞரது கவிதைகளும் பாரதி, பாரதிதாசன், உருத்திரமூர்த்தி, நீலாவணன்இ குறிஞ்சித் தென்னவன்   கவிதை வரிசைகளில் தனக்கெனவும் ஒரு இடத்தைப் பிடிக்கும் என்பது வெள்ளிடைமலை.

தொடர்புகொள்ள....

கவிஞர்.குறிஞ்சிவாணன்
பிரதான வீதி
சாகாமம்
திருக்கோவில்
தொலைபேசி இல: 0779770281

ஆனந்தத்தில் ஓர் அனல்

7:23 AM | Comments (0)

 ஆனந்தத்தில் ஓர் அனல் எனும் வித்தியாசமான புனைபெயரில் ஓவியர்; கவிஞர், ஆசிரியர் என பன்முக ஆற்றலை வெளிப்படுத்திச் சாதிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஓர் துடிப்புள்ள இளைஞனே விநாயகமூர்த்தி ஜீவராஜா. கிழக்கு மாகாணத்தில்...

Read more

நண்பனின் காதலி

9:37 AM | Comments (0)

அது ஒரு இருண்ட சாலை. ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்ததாலும்இ இரவு 11 மணியைத் தாண்டியிருந்ததாலும் எங்குமே மயாண அமைதியே நிலவிக்கொண்டிருந்தது. “விரைவாக விரைவாக” என்ற நண்பனின் குரலைத்தவிர ஏனைய ஓசைகள்...

Read more

மௌனமாய் பேசுகிறோம்...

9:32 AM | Comments (0)

'ஹாய் தருண் நீண்ட நாளைக்குப் பிறகு... என்ன இந்தப் பக்கம்? ' 'ஒரு வேலையா வந்தன் மது ஆனா அது முடியல்ல அதுதான் திரும்பிட்டன் ' 'அது சரி நீ என்ன...

Read more

Page 1 of 6123456Next