தமிழில் இல்லாத எழுத்துக்கள் தமிழில் காட்டும் ஆதிக்கம்
ஆரம்ப வகுப்பில் படிக்கும் பிள்ளை ஒன்று பாடப்புத்தகத்தில் ஒ ள வை யா ர் என்று வாசிக்கும் போது நம்மில் எத்தனையோ பேர் அதனைத் திருத்தி அது அப்படி இல்லை அது 'அவ்வையார்' என்று சொல்லிக் கொடுத்திருப்போம். ஆனால் அத்தருணம் நாம் பிழை விட்டிருக்கிறோம் என இவ் வாசிப்பின் முடிவில் நீங்கள் உங்களையே வினாவிக் கொண்டால் அதுவே எனது எழுத்திற்குக் கிடைத்த வெற்றியாய் நான் எடுத்துக் கொள்கிறேன்.
என்ன தலைப்பு இது? தமிழில் இல்லாத தமிழ் எழுத்துக்களா? என்று என்னை நீங்கள் ஒருவிதமாய் பார்பபதையும் என்னால் உணரமுடிகின்றது!
முதலாவதாக......
'ஒ'' வுக்குப் பக்கத்தில் 'ள' எழுத்தைப் போட்டு 'அவ்' என்று பாவிக்கிறார்கள். உண்மையிலே தமிழில் ஒரு உயிரெழுத்துக்குக் பக்கத்தில் இன்னொரு உயிர்மெய் எழுத்துச் சேர்த்து ஒரு தனி ஒலி வடிவம் கொண்ட எழுத்து தோன்றுவதாய் அல்லது இருப்பதாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறு கண்டுபிடிப்பதற்கான அவசியமும் தமிழில் இருப்பாதய் எனக்குத் தெரியவில்லை. அவ்வாறிருக்க 'ஒ'' வுக்குப் பக்கத்தில் 'ள' அச்சிடப்பட்டிருக்கும் போது பிள்ளை எப்படி அவ்வையார் என்று வாசிக்கமுடியும்? அது ஒ ள வை யா ர் என்று வாசிப்பதில் தப்பேதுமிருப்பதாய் தோன்றவில்லை. அப்படியானால் இலக்கணப் போலியுடன் எழுதும் 'அவ்வையார்' எனும் சொல்லைத் தமிழில் எப்படி எழுதுவது? என்ற அடுத்த வினாவை நீங்கள் கேட்க இடமளிக்காமலேயே விளக்கம் தரவேண்டியது இந்த இடத்தில் எனது கடமையாகிறது.
'க' எழுத்தின் ஓசையை ா எனும் தமிழ் குறியீடு எப்படி நெடிலாக்குகின்றதோ அதேபோன்றதொரு இன்னுமொரு குறியீடே ஒ எனும் எழுத்தின் ஓசையை 'அவ்' என்று மாற்றியமைக்கிறது. அந்தக் குறியீடுதான் சிலருக்கு மட்டும் தெரிந்த பலருக்குத் தெரியாத 'வெள்ளிக்கால்' எனும் குறியீடு. அனி வெள்ளிக்காலை எழுதுவது எப்படி எனப் பார்போம்! h போன்றே வெள்ளிக்காலும் தனித்து ஓசை தராத ஒரு குறியீடாகும் இது 'ள' போன்று 'ஒ' வின் உயரத்தில் பாதி உயரமுடையதாக எழுத வேண்டும்;
ஆக தமிழில் இல்லாத 'ஒள' என்னும் (தமிழ்) எழுத்து, பாடப்புத்தகம் அச்சிடும் அச்சகத் தட்டெழுத்து செய்பவனுக்குத் தெரிந்திரா விடினும் அதைச் செம்மை பார்த்துப் பதிப்பிக்கும் தமிழ் அறிஞர்கள் கவனித்திருந்தால் அல்லது தமிழ் அரிச்சுவடி கற்பிக்கும் ஆசிரியர்கள் கவனித்திருந்தால். இந்நிலையை மாற்றியிருக்கலாம். இவ்விடத்தில்தான் பாரதி சொன்ன 'மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்ற வரிகள் உயிர் பெறுவதாய் ஓர் உணர்வு. அது அவ்வாறிருக்க அந்த வரிகளை வலுவிளக்கச் செய்ய தமிழ் இணையங்கள் பங்களிக்கின்றன எனும் கருத்து உங்களுக்கு வருவது போன்று எனக்கும் வந்தது.
இதுவரை காலமும் ஓவியமாய் ஒளிர்ந்த தமிழ் எழுத்து வடிவங்கள் இன்று இணையத்தில் யுனிகோட் எனும் தமிழைத் தமிழாய் எழுதும் நிலைக்கு மாற்றமடைந்தன. எழுத்துருவில் தட்டச்சுச் செய்யும் போது ள வின் பருமனை மாற்றியமைப்பதன் மூலமாக ஓரளவு அவ் உச்சரிப்பைப் பெறக்கூடியதாய் இருந்த தமிழ,; யுனிக்கோட் முறையில் அந்த வாய்ப்பையும் இழந்து தவிக்கிறது. இது எனக்கு கவலை அழிக்கிறது? உங்களுக்கு? மீண்டும் வெள்ளிக்காலை வென்றெடுக்கலாமா? வினவிப் பார்க்கிறேன்? விடை!! நிச்சயமாக என்கையில் இல்லை என்பதே விடை!

அடுத்த, தமிழில் இல்லாத தமிழ் எழுத்தை விளக்க எனக்கு யுனிக்கோட் இடந்தரவில்லை ஆதலால் படத்தில் தருகிறேன் புரிந்து கொள்ளுங்கள்.


தமிழில் குறியீட ஒன்றுடன் (அதாவது அரவுடன்) உயிர் சேர்த்து ஒரு எழுத்து உருவாவதில்லை. இதுவும் யுனிக்கோட் தவறவிட்ட தமிழ் எழுத்து! ஆனால் இன்று தமிழில் ஆதிக்கம் காட்டும் தமிழ் இல்லாத தமிழெழுத்து.
Category: New, கட்டுரைகள்