அவள் முட்டாள் அல்ல

ன காரியம் பண்ணீட்டீங்க ரிஷானா இந்த எக்ஸ்ஷாமில மார்க்ஸ் கொறஞ்சா நல்லாப் படிச்சி அடுத்த எக்ஸ்ஷாமில கூட மார்க்ஸ் வாங்கிறதுதானே” “நான் சொன்னா எங்க கேக்கப் போறா உங்கட உம்மா! இந்த சனியம்புடிச்ச படிப்பெல்லாம் என்னத்துக்கு. பதினெட்டு வயது ஆகிற்று….. என்று புலம்பிய இஸ்மாயிலை “இங்கெல்லாம் இப்படியெல்லாம் ஏசக் கூடா… நீங்க வெளியில் நில்லுங்கையா போங்க போங்க” என்ற கங்காணியின் வார்த்தைகள் மரியாதையூடன் வெளியேற்றின.
உயர்தர வகுப்பில் படிக்கும் ரிஷானா ஒரு கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த ஒழுக்கமான மார்க்கப்பற்றுள்ள பெண்ணாகவே வாழ்ந்து வந்தவள் என்பதால் இஸ்லாத்தில் விலக்கப்பட்ட தற்கொலை முயற்சியில் ரி~hனா… என்பதை யாராலும் நம்பவே முடியவில்லை.
தற்போது வெட்கப் பட்டவளாக வைத்தியசாலையில் ரிஷானா.
“இவள் பொய் சொல்றாள் இவள் என்னத்துக்கு நஞ்சி குடிச்சாளோ தெரியா இப்பத்தைய புள்ளையள் எங்க வாறாளுகள் போறாளுகள் எண்டு ஆருக்கு தெரியூம்”
“மாக்ஸ் குறைய எடுத்ததாமா? இந்த தேவையில்லாத வேலைய பாத்த டைமில படிச்சிருந்தாலும் அடுத்தமுற நல்ல மாக்ஸ் எடுத்திருக்கலாம்”
போன்ற வைத்திய சாலை ஊழியர்களின் வார்த்தை வாள்கள் ரிஷானவை அரிந்தாலும்...
“”சீ உங்களுக்கு வேற வேலையே இல்லையா பாவம் அவள்! அவளே வேதனையில இருக்கா அவளுக்கு இப்படியெல்லாம் கதைக்கிறிங்;களே” என்ற இதமான வார்த்தைகளும் அவ்வப்போது அவளை அரவணைத்துக் கொண்டன.
ஆயிரம் ஆயிரம் அட்வைஸ்கள்...
அட்வைஸ் பண்ண வரும் அனைவருமே ரிஷானிவூக்கு எதிரிகளாகவே தெரிந்தனர். இதற்கிடையில் இச்செய்திக்கு இறக்கை முளைத்து வைத்திய சாலையெங்கும் பறந்து திரிந்தது. இதனால் போய் வருபவர்கள் எல்லாம் ரிஷானாவை பார்த்த பார்வை அவளுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாச்சின.
“”இப்ப சொல்லுங்க மகள்! இப்ப யாருமே இல்ல. ஏன் இப்படிச் செய்தீங்க” என ஒரு தந்தையின் தோரணையிலும் சிகிச்சை நோக்கிலும் வினாவினார் வைத்தியர்.
“”நான் சொல்றது உண்மதான் டொக்டர். எக்கவூண்ட்ஸ் பாடத்துல எனக்கு மார்க்ஸ் குறைய... பிரண்ட்ஸ்க்கெல்லாம் கூட.. அதான் தாங்க முடியல்ல. இப்படிச் செஞ்சிட்டன்” என்று அழுதவாறே பதிலளித்தாள் ரிஷானா.
அதற்கிடையில் ரிஷானாவை பார்க்க வந்த தோழிகளிடம் விசாரித்து ரிஷானா இஸ்மாயிலின் மகனை காதலிப்பதையும்இ வீட்டிலும் சம்மதம் என்பதால் அவர்களுக்கிடையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்பதையும் அங்குள்ள ஊழியர்கள் அறிந்திருந்தனர். அதன் பிறகுதான் அட்வைஸ்கள் வானைப் பிளந்தன.
“என்ன முட்டாள் தனமான வேலை. எக்சாமில மார்க்ஸ் குறஞ்சதுக்கு நஞ்சு குடிக்கிறதெண்டா ஒரு முட்டாள் தான் நீங்க! எல்லா மேதைகளும் கூடிய மார்க்ஸ் வாங்கிதான் அப்படி வாறாங்களா? எங்க போனது உங்க அறிவு. அப்படியெண்டா வகுப்புல ஒருத்தர தவிர மற்ற எல்லாருமே நஞ்சிதான் குடிக்கோணும்” இது அங்குள்ள தாதியின் அட்வைஸ்.
அப்போதுஇ “”எக்ஸ்கியூஸ் மீ டொக்டர். நான் ரிஷானாவின் கிளாஸ் ரீச்சர். ரிஷானாவை கொஞ்சங் பாக்கலாமா?” என்றவாறு உள் நுழைந்த வகுப்பாசிரியர்....
“ ஏம்மா ரிஷானா இப்படிச் செஞ்ச.. உனக்கென்ற பிரச்சன. எனக்கிட்ட சொல்லியிருக்கலாமே.. நேற்று வகுப்புல கூடிய மார்க்ஸ் எடுத்ததுக்கு உன்ன நான் விஸ்பண்ணும் போது கூட சந்தோசமாத்தானேம்மா இருந்தா! அதுக்கிடையில உனக்கு என்ன நடந்தது?”
என ஆசிரியர் கேட்டது ரிஷானாவூக்கு எங்கே விளங்கியிருக்க போகுது! ரிஷானாவின் நினைப்பெல்லாம் அவள் காதலன் தன் ஆருயிர் தோழிக்கு அனுப்பிய காதல் ததும்பும் எஸ்.எம்.எஸ் களிலேயே இன்னமும்; ஒட்டிக்கொண்டிருக்கின்றன.
(யாவும் கற்பனையல்ல)