மௌனமாய் பேசுகிறேன்

Mathan | 9:04 PM | 0 comments

மணிக்கணக்காய் உன்னுடன்
மௌனமாய் பேசுகிறேன்...
ஜனனிக்கும் நம் வார்த்தைகளால் - காதல்
மரணித்துப் போயிடுமோ? என்று
பிரமித்துப் போனவளாய்....

கண்ணீரைத் தேக்கி வைக்கின்றேன்...
என் கல்லறைப் பூச் செடிகளும்
கண்ணீர் சிந்தினால்
தாங்கமாட்டாய் என்பதற்காக...

காலம் கடந்தாலும்
ஞாலம் உடைந்தாலும்
காலன் கவர்ந்தெந்தன்
கோலம் சிதைந்தாலும்
உனக்காகவே உயிராகுவேன் - மீண்டும்
மீண்டு வந்து நான் உனதாகுவேன்.

உன் மனதை
கல் என்று சொல்ல மாட்டேன்
என்னை முழுதாய்
கற்றுக் கொண்டவன் நீ!

உன் மௌனங்கள்
முடிவென்று வொல்ல மாட்டேன்
என் மேன்மைக்காய் உன்னை
மெழுகாக்கியவன் நீ!

உன் ஓரப் பார்வைக்காய்
ஒருகோடித் தவமிருந்தும் - உன்
மௌன வார்த்தைகளால்
பௌர்ணமியாகிறேன்-பின்
புண்பட்டுப் போனவளாய் நானும்
பண்பட்டுப் போகிறேன்


உன் மௌனத்தின் காரணம்
மற்றவராய் இருந்தாலும் - என்
ஜனனத்தின் காரணம் நீயல்லவா?

உன் தயக்கத்தின் காரணம்
மற்றவராய் இருந்தாலும் - என்
ஏகக்கத்தின் காரணம் நீயல்லவா?

உன்னைப் பிரிந்த நானென்பது
மண்ணைப் பிரிந்த மழையல்லவா?-ஐயன்
குறளைப் பிரிந்த தமிழல்லவா? - நான்
யானைக் குளம்பதில் சிக்கிய நுளம்பல்லவா?

ஒரு சொட்டு வார்த்தைக்காய்
என் உயிர் கொட்டும்-பின்
மெளனத்தின் கானத்தால் - என்னை
கவி தட்டும்

Category: