கவனம்!பார்த்துது நட

Mathan | 11:26 PM | 0 comments


கட்டுச்சோறு கட்டிக்கிட்டு
காட்டுவழி போற மச்சான்
கிட்ட நானும் ஒட்டி வந்தா
இடந் தருவாயா – உந்தன்
கிட்ட நானும் ஒட்டி வந்தா
இடந்தருவாயா – மனசுக்குள்ள
இடந்தருவாயா?

பட்டப் பகல் வேளையிலே
பாட்டுக்கட்டி நான் படிக்க
கேட்டுக்கிட்டு நீயிருக்க
போய் வருவாயா - இல்லை
விட்டு விட்டு ஓடிநீயும்
போய் மறைவாயா?

பிட்டுடனே வாள மீனு(க்)
கூட்டுவச்சி நான் தரவா
கட்டித்தயிர் சட்டியையே
ஒட்டுமொத்தமாய்த் தரவா
வெட்டி வேலை பாக்கிறாயே
கிட்ட வா மச்சான் - எனக்கு
சட்ட வாங்கிப் போட்டுத் தாலி
கட்ட வா மச்சான்.

எட்டுப் புள்ள பெத்துப் போடு
பட்டுப்போல நான் வளர்க்க
மாட்டு வண்டி கட்டிப் போடு
நாட்டை நாம சுத்திப் பார்க்க

(வேறு)
சொட்டுச் சொட்டா உன்ன நானும்
சுட்டுக் கொல்லுவண்டா – நீயும்
எட்டி எட்டி வேற பொண்ண
தொட்டுப் பார்த்தயண்டா!

Category: ,