முதற்பார்வை..

Mathan | 11:26 PM | 0 comments

முதன் முதலாய் இன்று
இருதயம் கனக்கிறது
 நீ என்னைக் கடக்கையிலே  

இரசாயனங்கள் என்னுள்
இரகசியம் பேசிக்கொள்கின்றன...
உன்னவள் இவள்தான் என்று

பழகப் பழகப் பாலும் புளிக்குமாம்
யாரிங்கு பொய் சொன்னது ?- உன்னைக்
கண்ட பின் தானே
பழஞ்சோறு  சுடுகின்ற
அதிசயம் நடக்கின்றது!

ஆயிரம் குயில்களின்
சேர்க்கையை உந்தன்
குரல் நாண்கள் பகர்கின்றன - அந்த
அதிசயக் கங்கையின்
அசைவு உன் கூந்தலில்
அடக்கமாய் கிடக்கின்றதே!

மொத்தமாய் நானும்
பித்தாகிப் போகிறேன்  - நீயுன்
கட்டிய கணவனோடொட்டியே
போகயிலே.....

Category: ,