பதறித் துடிக்கும் இதயம்

Mathan | 9:33 PM | 0 comments

மாரிகாலம் தொடங்கிறது
மழையும் மெல்லப் பெய்கிறது
பாரிலுள்ள பயிரனைத்தும்
பருவமடையத் தவிக்கிறது

ஊரும் உறங்கிக் கிடக்கிறது
உலாவித் திரிய வழியுமின்றி
ஏரும் எருதும் உழைக்கிறது
எல்லோர் வாழ்வும் உருள்வதற்கு

காகிதங்கள் தரையிலிங்கே
கப்பல் வடிவம்  எடுக்கிறது
லேகியங்கள் உண்ட வண்டாய்
வாண்டுக்கூட்டம் பறக்கிறது

ஈசல் வெளியே பறக்கிறது
இதயம் அதற்காய் அழுகிறது
பாசம் கொண்ட நம்மையெல்லாம்
பதறித் துடிக்க வைக்கிறது

மாடி வீட்டு மாந்தரெல்லாம்
மழையைக் கண்டு களிக்கையிலே
கூடியுண்ணக் குடில்களின்றி
ஏழையுள்ளம் துடிக்கிறது.

Category: