நண்பனின் காதலி

Mathan | 9:37 AM | 0 comments

அது ஒரு இருண்ட சாலை. ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்ததாலும்இ இரவு 11 மணியைத் தாண்டியிருந்ததாலும் எங்குமே மயாண அமைதியே நிலவிக்கொண்டிருந்தது. “விரைவாக விரைவாக” என்ற நண்பனின் குரலைத்தவிர ஏனைய ஓசைகள் அனைத்துமே எங்கேயோ ஒழிந்து கொண்டன. குருதி வடிந்த நண்பன் குணாளனை ஏற்றியபடியே சாலையின் முடிவை தொட்டுவிடும் வேகத்தில் விரைந்துகொண்டிருந்தது கோகுலனின்  கார்.
    அவனால் நம்பமுடியாத வேகத்தில் கார் விரைந்துகொண்டிருந்தாலும் அதையும் முந்தும் வேகத்தில் ‘என்ன சேர் நீங்க! இப்படிப் பண்ணிட்டீங்க?’ என்ற கிருஷாந்தினியின் வார்த்தைகள் அவனது காதில் பயணித்துக் கொண்டுதான் இருந்தன.
    கோகுலன் ஒரு எழுத்தாளன் அவன் போகுமிடமெங்கும் அவனைச் சுற்றும் கூட்டமே தன் எழுத்துக்களுக்குக் கிடைக்கும் வெற்றியாக அவன் நினைப்பதில் என்ன தவறிருக்கின்றது? குணாளனும் கிருஷாந்தினியும் கோகுலனின் விசிறியாய் இருந்து நண்பர்களானதை எவ்வாறு மறுக்க முடியாதோஇ நண்பர்களாயிருந்து காதலாராகியதும் அவ்வாறே!
    சாலையில் கண்ணும் கிருஷாந்தியில் வார்த்தைகளில் மனதும் சிக்கிக் கொண்டதால்இ சாலையின் ஓரம் வளர்ந்திருந்த ஆலைமரம் கார் முன்னே பிரசன்னமானதை கோகுலனால் உணர முடியவில்லை. சடுதியாக பிறேக் போட முயன்றும் அதில் தேற்றுப் போனான். காரின் கதவு வழி திறந்து அவனை சாலையில் வீழ்த்தியது. நள்ளிரவு 12 மணிக்கு சாலை ஓரத்தில் தன்னந்தனிமையில் உணர்வற்றுக் கிடந்த கோகுலனை அவனது கைத்தொலைபேசிதான் எழுப்பியது. அழைப்பது யார் எனப் பார்க்க முயன்ற போதுதான்இ நள்ளிரவு 12 மணிக்கும் மாலை 4.30 இற்கும் இடையான தொடர்பற்ற இடைவெளியை, அவன் மதியச் சாப்பாடு உன்டுவிட்டு தூங்குவதற்கு முன் கைத்தொலைபேசியில் வைத்துக் கொண்ட 4.30 மணி அலாரம் சீர்படுத்தியது. 
    அவசர அவசரமாக எழும்பி A/L வகுப்பிற்குப் போவதற்கு தயாராகும் வேளையிலும் யார் அந்தக் குணாளன்? யார் அந்தக் கிருஷாந்தினி? நான் அப்படி என்ன செய்தேன்? என்ற வினா அவனுக்கு வினாவாகவே சில மணிநேரம் தொடர்ந்தது.

Category: