பயங்கர இரவு

Mathan | 9:05 AM | 0 comments


சுமார் 10 வருடங்களுக்கு முன் .....
மாலை 6 மணிக்கெல்லாம் ஊர் அமைதி காணும் காலம். சூரியனின் மறைவே ஓர் மரண பயத்தை ஏற்படுத்தும் நாய்களின் சத்தம் கேட்டாலே மனங்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் கூட மறைவிடங்கள் தேவைப்படும் .காரணமின்றிய கொலைகள். கண்டவருக்கெல்லாம் பயம். 8 மணிக்குப் பின் கடிகார ஓசையைத் தவிர அற்ற அனைத்துமே மௌனிக்கும் மர்ம தேசமாய் அது……..
அப்படி ஒரு நாளில் அதே தேசத்தில் இரவு 10 அணிக்கு ரூபன் தனது இரவுக் கடமை நிமிர்த்தம் உறக்கமற்றிருந்தான். கண்ணை மறைக்கும் காரிருள்……. அதையும் மறைக்கும் அடைமழை அந்த இருட்டுக்கு இன்னும் பயங்கரத்தைக் கூட்டியது. அந்தப் பயங்கர வேளையில் ரூபனை நோக்கி ஒரு உருவம்….. இதுவரை கண்டிராத ஒரு முகவாக்கு….. ஏதோ ஒன்றைத் தொலைத்துவிட் ஆழ்ந்த தேடலுக்குள் ஒழிந்திருந்த கண்கள்…. இவை எனது கண்களை விட்டகல்வதற்குள் அந்த உருவம் இந்தப் பூமியை விட்டு அகன்றது. எங்கிருந்தோ வந்த “பளீ….ர்” என்ற சத்த்தினால் அந்த உருவத்தின் குருதி சுவை பார்க்கப்பட்டது. “மோட்டீனுக்கு வேலையில்லை இனி கைகளே போதும்” என்ற பார்வையோடு ரூபன் அந்த நுளம்பின் குருதிக் கறை படிந்த கைகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவ்வளவுதான் கத..

Category: ,