கூளும் மீசையும்

'அவர் மட்டும் என்ன கல்லா! நாலு பெhம்பளபுள்ளைகள கரசேக்கணும் எண்ட கவலயே இல்லாம இருக்க...!' என சுலைகாவின் மனம் சென்னாலும் அதற்கு எதிர்மாறாகவே வாய் புலம்பிக் காண்டிருப்பதை சுலைகாவால் தடுக்கமுடியவில்லை.
கனிபாவுக்கு ஐம்பத்துஐந்து வயதிருக்கும். காலம் நெற்றியில் சித்திரம்கீற ஆரம்பித்துவிட்டது. என்றாலும் சுறுசுறுப்பானவர். முதல் நெல் வியாபாரந்தான் செய்தவர் அப்போது அவர் தொழிலுக்கு அவரே முதலாளி இப்பா அரசாங்க உத்தியோகம். எம்பிட செல்வாக்கில எடுத்ததுதான் என்றாலும் அவருக்கு கீழே வேலைசெய்ய யாருமே இல்லை என்பதை அவ்வப்பாது நினைத்து கவலைப்படுவதை அவரைத் தவிர யாரும் அறிய வாய்ப்பில்லை.
என்ன வாப்பா நானாவுக்கு மட்டும் கெம்பசிக்கு பாகேக்க ஐயாயிரம் ரூபா குடுப்பீங்க எனக்கெண்டா ஆயிரம் ரூபா தாரத்திக்கே ஆயிரம் தரம் யோசிக்கிறீங்க? நானும் கெம்பஸ் முடிச்சி உங்களுக்கு உழச்சித் தரமாட்டனா? என கனிபாவின் மகள் மஷாஹிரா கேட்கும் போதுதான் அவரின் மனதை உலுக்கிப் போட்டது. மகளை தொடர்ந்து படிப்பிய்க்க கனிபாவால் முடியாது! தன் மகனின் படிப்புச் செலவுக்கே பன்தோட்டத்தை தான் நம்பவேண்டியிருக்கு... அதுவும் ஒருபிடி பன்கட்டு 18 ரூபாதான் றப்பர் பாய் வந்த்தால இப்ப அதுவும் சரியான கஸ்டம். இதெல்லாம் பார்த்திட்டுத்தான் கனிபா தனது மகளுக்கு கலியாணம் ஒன்று பேசியிருக்கார். மாப்பிள்ளை நல்ல பாடியன்தான் ஏயெல் மட்டும் படிச்சிருக்கிறதால மஷாஹிரா கெம்பஸ் போறத விரும்பல போல இதை கனிபா சுலைகாட்டகூட சொல்லல்ல. சொன்னா என்ன நடக்கும் எண்றதும் அவருக்கு தெரியாம இல்ல.
மகளின் ஆசயில மண்ணள்ளிப் பாடப்பாறமே என்பதைப்பற்றியே எந்நேரமும் கவலை கனிபாவுக்கு. விருப்பமில்லதான் என்றாலும் சாகிறத்துக்குள்ள மகளின் கலியாணத்த பாக்க வாப்பாவுக்கு ஆச வாறத்தில என்ன தப்பு? 'அவளுக்கெங்க தெரியப்போகுது இதெல்லாம்! ' என சுலைகாவுக்கு திட்டியபடியே யோசித்துக் கொண்டிருந்த கனிபாவை அருட்டிவிட்டது சுலைகாவின் வார்த்தைகள்!
Category: கதைகள்